விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)

மற்றவர்கள் வாழ்க்கையிலும், நம்முடைய சொந்த அனுபவங்களிலும் நாம் உற்று நோக்கும் போது , உயர்த்தப்பட்ட காலகட்டத்திலும் காரியங்கள் எல்லாம் சாதகமாக வாய்க்கும் போதும்  கொடிய பெருமையானது வெளிப்படுகிறதை நாம் அறிய முடியும். மறுபுறம், சில சமயங்களில், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளும் தேவன் மீது உள்ள அன்பை இழக்கச் செய்து அவரை மறக்க செய்கின்றது.இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கின்றன. நாம் விரைந்து விழித்தெழுந்து சீர் பொருந்தாவிட்டால் 'உண்மையான விசுவாசி' என்ற நிலையிலிருந்து நாம் விழுந்துவிடுவோம். [...]

தேவன் கவனித்து அறிவார்

கர்த்தராகிய நானே ... இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்எரேமியா 17:10 உங்களுக்கு நாளை டெஸ்ட் என்றால் எத்தனை பேர் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வீர்கள்? கல்வித்துறையானாலும் உடல் பரிசோதனை ஆனாலும் 'டெஸ்ட்' என்று வரும்பொழுது நம்மில் அநேகருக்கு பதட்டமும் பயமும் உண்டாகிறது அல்லவா? சில வேளைகளில் , நானும் என் பிள்ளைகளின் குணநலன்களை கண்டரிய அவர்களை சோதிப்பதுண்டு. என் இனிய மகள் சாக்லேட் சாப்பிட ஆசைப்படுகையில், அவள் கேட்டதைவிட கூடுதல் பணம் கொடுத்து தன் அண்ணணுக்கும் வாங்கி [...]

உங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்!

வானத்தின் மகத்துவத்தை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நட்சத்திரங்களை கணக்கிட சாத்தியமேல்லை என்ற உண்மையை நம் சிறிய மூளை அறிந்திருந்தாலும் ஒரு முறையாவது அவைகளை எண்ண முயற்சித்திருப்போம்.. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதன் பெயரால் இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளரும் படைப்பாளரான தேவாதி தேவனால் அழைக்கப்படுகின்றன என்ற தவறிழைக்காத உண்மையை சங்கீதம் 147: 4 தெரிவிக்கிறது. கணக்கில்லா நட்சத்திரங்களின் ஒவ்வொரு பெயரையும் நினைவில் வைத்துக் அழைக்க முடியுமேயானால், அவருடைய சொந்த சாயலில் அற்புதமாக படைக்கப்பட்ட உங்களையும் என்னையும் [...]

உலகத்திற்கு நல்ல செய்தி!

தேவனாகிய இயேசு ஏன் மனிதனாய் பிறந்தார் தெரியுமா? பாவிகளை இரட்சிக்க - 1 தீமோத்தேயு 1:15, மத்தேயு 9:13மனுஷருடைய ஜீவனை இரட்சிக்க -லூக்கா 9:56உலகம் இரட்சிக்கப்படுவதற்காக- யோவான் 3 :17,12:47இழந்துபோனதைத் தேட, இரட்சிக்க- லூக்கா 19:10பிசாசினுடைய கிரியைகளை அழிக்க-1 யோவான் 3: 8மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்க-எபிரெயர் 2:14ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ண -எபிரெயர் 2:15உலக மக்கள் மீது உள்ள தேவனுடைய மிகுந்த அன்பை வெளிப்படுத்த - யோவான் 3:16பிரசங்கிக்க,குணப்படுத்த-லூக்கா 4:18அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய [...]