கர்த்தர் நன்மையானதைத் தருவார்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். -சங்கீதம் 85:12 கர்த்தர் நமக்கு என்ன நன்மைகளைதருவார் என்று பார்ப்போம்.இரண்டு விதமான நன்மைகள்தருவார். ஆவிக்குரிய நன்மைகள் உலக நன்மைகள் ஆவிக்குரிய நன்மைகள் அ) இரட்சிப்பின் சந்தோஷம்ஆ) ஆவியானவரின் அபிஷேகம்இ) ஆவிக்குரிய கனிகள் (சாட்சி வாழ்க்கை)ஈ) ஆவிக்குரிய வரங்கள் (ஊழியம்) உலக நன்மைகள் அ) நல்ல குடும்பம்ஆ) போதுமான வருமானம்இ) ஆரோக்கியமான வாழ்க்கைஈ) உண்மையான நண்பர்கள் தேசத்தில் வாழும் ஒவ்வொருமனிதனுக்கு கர்த்தர் தருகிறார்.அதினிமித்தம் தேசம் தன் பலனைக்கொடுக்கும். யோசேப்பு யோசேப்பு பல கஷ்டங்களைதாண்டி வந்த பிறகு தேவன் அவனுக்கு நன்மைகளை செய்து அவன் தலையை உயர்த்தினார்.அவனை உலக நன்மைகளினாலும்ஆவிக்குரிய நன்மைகளினாலும்நிரப்பினார். அதனால் தன் குடும்பம் அனைத்துக்கும், தகப்பனுக்கும்,தன் உடன் பிறந்த சகோதரர்கள்யாவருக்கும், அவர்கள் மனைவிபிள்ளைகள் யாவரையும் போஷித்து பராமரித்து பாதுகாத்து வந்தான்.அந்த தலைமுறைக்கு அவனைகர்த்தர் இரட்சிகனாய் வைத்து ஆசிர்வதித்தார். தேவன் நம்மையும்ஆசிர்வதிப்பாராக! நம் தலையைஉயர்த்தி மேன்மை படுத்துவாராக!அநேகருக்கு நம்மை ஆசிர்வதமாய்மாற்றுவாராக! தேவனுக்கு … Continue reading கர்த்தர் நன்மையானதைத் தருவார்

ஆழம் (சிந்திக்க: செயல்பட)

ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. – சங்கீதம் 42:7 என்ற தேவ வார்த்தையை நாம் இன்று கற்றுக் கொள்ளப் போகிறோம். ஆழம் என்றால் என்ன என்று பார்க்க போகிறோம். பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. –நீதிமொழிகள் 25:3 பூமியின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று நாம் பார்க்கலாம். கீழே ஆழத்தில் உண்டாகும்ஆசீர்வாதங்களினாலும்….உன்னை ஆசீர்வதிப்பார். ஆதியாகமம் 49:25 பூமியின் ஆழத்தை ஆராய்ந்து முடியாது.ஆனால் கீழே ஆழத்தில் ஆசிர்வாதம் உண்டு என்று தேவ வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. அது போலவே ராஜாக்களின்இருதயமும் ஆராய்ந்து முடியாது.நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்துவின் இருதயமும்ஆராய்ந்து முடியாது. அவர்நம்மை ஆசிர்வதிக்கசித்தம் கொண்டுள்ளார்.அது தான் நூற்றுக்கு நூறு உண்மை.பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;எபேசியர் 3:18 அது போலவேகிறிஸ்துவின் அன்பின் ஆழத்தைஆராய்ந்து முடியாது. அந்த அளவுக்குஆழமான அன்பினால் நம்மைநேசிக்கிறார்.கர்த்தரின் இருதயத்தின் ஆழம் நம்மைநோக்கி கூப்பிடுகிறது.நாம்அவரை நேசிக்க வேண்டும்என்று விரும்புகிறார். Continue reading ஆழம் (சிந்திக்க: செயல்பட)

சங்கீதம் 14:5 (சிந்திக்க : செயல்பட)

௧ர்த்தர் நீதிமானுடைய சந்நிதியோடே இருக்கிறார்.என்ற தேவனுடைய வார்த்தையின்படி நிதிமானுடைய பிள்ளைகளடோடே இருக்கிறார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான.அது அவனுக்கு நிதியாகஎண்ணப்பட்டது . ஆகையால் ஆபிரகாமின் மகன் ஈசாக்கை ஆசிர்வதிககிறார். ஆதியாகமம்26:3இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான்உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.என்று ஈசாக்கோடே உடன்படிக்கை செய்கிறார். அப்படியே நிறைவேற்றவும் செய்கிறார்ஆதியாகமம்26:12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனைஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;பஞ்ச காலத்தில் தேவன் ஈசாக்கைஆசிர்வாதித்தார் .ஆபிரகாமுக்குசொன்ன வார்த்தையை நிறைவேற்றினார்.கர்த்தர் நம்மையும்ஆசிர்வதிப்பார் .நம்முடைய பிள்ளைகளையும் ஆசிர்வதிப்பார். தேவனுக்கு மகிமை! கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!!! Continue reading சங்கீதம் 14:5 (சிந்திக்க : செயல்பட)

சங்கீதம் 14:5 (சிந்திக்க: செயல்பட)

கர்த்தர் நீதிமானுடைய சந்நிதியோடே இருக்கிறார்.சங்கீதம் 14:5 வசனத்தின் படி நம்முடன் பேசுகிறார் .நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.ஆதியாகமம் 6:9 நோவாவைப் போல நாமும் தேவனுடைய பார்வையில்நிதிமானாய் இருக்க வேண்டும்.இன்று இருக்கும் கால சூழ்நிலையில்உலகம் ரொம்பவே கெட்டுப் போய்உள்ளது. நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.இந்த வசனத்தின்படி நாமும் தேவனோடே சேர்ந்து வாழ்ந்தால் தான் நாம் நம்மைப் பரிசுத்தமாய் பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்று இருக்கும் கால சூழ்நிலையில் உள்ள கொள்ளை நோய்க்கு நாம் தப்பி வாழ முடியும். அழிவுக்கு தப்ப முடியும் நோவாவைஅழிவிலிருந்து பாதுகாத்த தெய்வம் நம்மையும் பாதுகாப்பார்நம்முடையபிள்ளைகளையும் தேவன் பாதுகாத்து அவர்களோடு இருப்பார்.தேவனுக்கு மகிமை ! கர்த்தர் தாமேஉங்களை ஆசிர்வதிப்பாராக !!! Continue reading சங்கீதம் 14:5 (சிந்திக்க: செயல்பட)

சங்கீதம் 14:5 (சிந்திக்க செயல்பட)

1 .தேவன் நீதிமானுடைய சந்நிதியோடெ இருக்கிறார்.2. ஒவ்வொரு நாளும் தம் பிள்ளைகளை விசாரித்து வருகிறார்.3. தம்முடைய கண்களை அவர்கள்மேல் பதித்தியிருக்கிறார்.4. சிறந்த பாதுகாப்பைத் தருகிறார்.5. தேவைகளையும் சந்திக்கிறார்.6. நாம் பயப்பட வேண்டியஅவசியமில்லை.7. சர்வ வல்லமைநிறைந்த தேவன் நம்மோடு உண்டு. Continue reading சங்கீதம் 14:5 (சிந்திக்க செயல்பட)