தேவன் பேசுகிறார் (பாகம் 5) : வேதாகமம் மற்றும் பல

'தேவன் பேசுகிறார்' என்ற தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி பதிவில் வேதாகமம் மற்றும் பல வழிகளில் தேவன் பேசுவதை தியானிப்போம்! வேதாகமம்: கடந்த பதிவுகளில் பாா்த்த ௮நேக வழிகளைக் காட்டிலும்,தேவன் தினமும் நம்மிடம் பேசும் மிகவும் நிலையான,சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சியான வழி அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் தான்.இன்றைய கால கட்டத்தில்,விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் வசனமானது தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களின் வழியாகவும் 24 * 7 எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.ஏன்,இப்பொழுதும் இப்பதிவின் மூலமாகவும் தேவன் ௨ங்களோடு பேசுகிறார் ௮ல்லவா! [...]