கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். -சங்கீதம் 85:12
கர்த்தர் நமக்கு என்ன நன்மைகளை
தருவார் என்று பார்ப்போம்.
இரண்டு விதமான நன்மைகள்தருவார்.
- ஆவிக்குரிய நன்மைகள்
- உலக நன்மைகள்
ஆவிக்குரிய நன்மைகள்
அ) இரட்சிப்பின் சந்தோஷம்
ஆ) ஆவியானவரின் அபிஷேகம்
இ) ஆவிக்குரிய கனிகள் (சாட்சி வாழ்க்கை)
ஈ) ஆவிக்குரிய வரங்கள் (ஊழியம்)
உலக நன்மைகள்
அ) நல்ல குடும்பம்
ஆ) போதுமான வருமானம்
இ) ஆரோக்கியமான வாழ்க்கை
ஈ) உண்மையான நண்பர்கள்
தேசத்தில் வாழும் ஒவ்வொரு
மனிதனுக்கு கர்த்தர் தருகிறார்.
அதினிமித்தம் தேசம் தன் பலனைக்
கொடுக்கும்.
யோசேப்பு
யோசேப்பு பல கஷ்டங்களை
தாண்டி வந்த பிறகு தேவன் அவனுக்கு நன்மைகளை செய்து அவன் தலையை உயர்த்தினார்.
அவனை உலக நன்மைகளினாலும்
ஆவிக்குரிய நன்மைகளினாலும்
நிரப்பினார். அதனால் தன் குடும்பம் அனைத்துக்கும், தகப்பனுக்கும்,
தன் உடன் பிறந்த சகோதரர்கள்
யாவருக்கும், அவர்கள் மனைவி
பிள்ளைகள் யாவரையும் போஷித்து பராமரித்து பாதுகாத்து வந்தான்.
அந்த தலைமுறைக்கு அவனை
கர்த்தர் இரட்சிகனாய் வைத்து ஆசிர்வதித்தார். தேவன் நம்மையும்
ஆசிர்வதிப்பாராக! நம் தலையை
உயர்த்தி மேன்மை படுத்துவாராக!
அநேகருக்கு நம்மை ஆசிர்வதமாய்
மாற்றுவாராக! தேவனுக்கு மகிமை!!!