ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. – சங்கீதம் 42:7
என்ற தேவ வார்த்தையை நாம் இன்று கற்றுக் கொள்ளப் போகிறோம். ஆழம் என்றால் என்ன என்று பார்க்க போகிறோம்.
பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. –நீதிமொழிகள் 25:3
பூமியின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று நாம் பார்க்கலாம். கீழே ஆழத்தில் உண்டாகும்ஆசீர்வாதங்களினாலும்….உன்னை ஆசீர்வதிப்பார். ஆதியாகமம் 49:25
பூமியின் ஆழத்தை ஆராய்ந்து முடியாது.ஆனால் கீழே ஆழத்தில் ஆசிர்வாதம் உண்டு என்று தேவ வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. அது போலவே ராஜாக்களின்
இருதயமும் ஆராய்ந்து முடியாது.
நம்முடைய ராஜாவாகிய கிறிஸ்துவின் இருதயமும்
ஆராய்ந்து முடியாது. அவர்
நம்மை ஆசிர்வதிக்க
சித்தம் கொண்டுள்ளார்.அது தான் நூற்றுக்கு நூறு உண்மை.
பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
எபேசியர் 3:18
அது போலவே
கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தை
ஆராய்ந்து முடியாது. அந்த அளவுக்கு
ஆழமான அன்பினால் நம்மை
நேசிக்கிறார்.கர்த்தரின் இருதயத்தின் ஆழம் நம்மை
நோக்கி கூப்பிடுகிறது.நாம்
அவரை நேசிக்க வேண்டும்
என்று விரும்புகிறார்.