கர்த்தர் நீதிமானுடைய சந்நிதியோடே இருக்கிறார்.
சங்கீதம் 14:5 வசனத்தின் படி நம்முடன் பேசுகிறார் .நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.
ஆதியாகமம் 6:9 நோவாவைப் போல நாமும் தேவனுடைய பார்வையில்
நிதிமானாய் இருக்க வேண்டும்.
இன்று இருக்கும் கால சூழ்நிலையில்
உலகம் ரொம்பவே கெட்டுப் போய்
உள்ளது. நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
இந்த வசனத்தின்படி நாமும் தேவனோடே சேர்ந்து வாழ்ந்தால் தான் நாம் நம்மைப் பரிசுத்தமாய் பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்று இருக்கும் கால சூழ்நிலையில் உள்ள கொள்ளை நோய்க்கு நாம் தப்பி வாழ முடியும். அழிவுக்கு தப்ப முடியும் நோவாவைஅழிவிலிருந்து பாதுகாத்த தெய்வம் நம்மையும் பாதுகாப்பார்நம்முடையபிள்ளைகளையும் தேவன் பாதுகாத்து அவர்களோடு இருப்பார்.
தேவனுக்கு மகிமை ! கர்த்தர் தாமே
உங்களை ஆசிர்வதிப்பாராக !!!