கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
சங்கீதம் 34:1
‘இன்ஸ்டன்ட் காபி’ எல்லோருக்கும் பரிச்சயமானது. ‘இன்ஸ்டன்ட் நன்றி’ என்ற வாசகம் உங்களுக்கு பழக்கமான ஒன்றா?
மேற்காட்டிய வசனத்தை எழுதிய தாவீது, தேவனை ‘எப்பொழுதும்’ என்று சொல்லும்பொழுது வெறும் ஜெப நேரத்தில் மட்டுமல்லாது பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி -ருக்கும் போதும் தேவனை துதிக்கும் பழக்கத்தை உடையவராக இருந்தி -ருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கீ -தத்தின் அறிமுகத்தை பார்க்கும் போது தாவீது தன்னுடைய சந்தோ -ஷமான,ஆசீர்வாதமான நாட்களில் மட்டும் சங்கீதங்களை பாடவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள -லாம்.
எடுத்துக்காட்டு:

சரி.நாம் எப்படி இன்ஸ்டன்ட் முறை -யில் நன்றி செலுத்தும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டு,நம் இருதயத் -தை எப்படி துதி பலிபீடமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற சில எடுத்துக் -காட்டுகளை பார்க்கலாம்.

- ஒவ்வொரு முறையும் மருத்துவம -னையை கடக்கும்போதும், பிச்சைக்காரர்களை பார்க்கும் போதும்,கடுமையான வெயிலில் வேலை செய்யும் கூலி ஆட்களை நோக்கும் போதும், கூடாரமே இன்றி கடற்கரையிலும் ரோட்டு ஓரங்களிலும் படுத்தும் உறங்கும் மக்களை பார்க்கும் போதும் பரிதாபப்பட்டு விட்டுவிடாமல் இவைகளுக்கெல்லாம் நம்மை தப்புவித்த ஆண்டவருக்கு அந்த ஷானப்பொழுதிலே நன்றி சொல்லுவோம்
- அதுமட்டுமல்லாது, நம் வாழ்க் -கைத் துணையோ, ஆசிரியரோ, வேலை பார்க்கும் ஸ்தலத்திலோ அல்லது ஊழியப் பாதையிலோ நமக்கு பாராட்டுகள் கிடைக்கும் பொழுது, அத்தருணத்தில் தானே நம் இருதயத்தில் தேவனை புகழ்ந்து ‘இதற்கு நீர் தான் கார -ணம் ஆண்டவரே!’ என்று அவரை உயர்த்துவோம்
- நம் சமையலறை அலமாரி பொருட்களால் நிறைந்திருப்பதை நாம் காணும் போதும், ஃபிரிட்ஜில் அதிக நாட்களுக்கு தேவைப்படும் சேர்த்து வைக்கப்பட்ட பொருட் -களை நாம் பார்க்கும் போதும், ஆகாரம் இல்லாமல் கஷ்டப் -படுகிற ஜனங்கள் மத்தியில், நம் தேவைக்கு மிஞ்சி நம்மை ஆசீர்வ -தித்த தேவனை எண்ணி அந்நேரம் தானே இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி பலிகளை செலுத்துவோம்
- நம் பிள்ளைகளின் பாசத்தாலும், அவர்களின் திறமைகளாலும், படிப்பின் ஞானத்தாலும், அழகா -லும் நாம் பூரிக்கும் போது அந்நொடிப்பொழுதே இதை அனுகிரகம் செய்த நம் தேவனுக்கு நன்றி செலுத்துவோம்
- முகமறியாத நம்பர் நமக்கு இரக்கம் காட்டும் போதும் உதவி செய்யும் போதும் உடனே அவரை கருத்துடன் துதிப்போம்
ஏனென்றால், மேற்சொல்லிய எல்லா எடுத்துக்காட்டுகளும் எல்லாருக்கும் எந்த நேரத்திலும் கிடைப்பதில்லை.
எல்லா சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்துவது என்பது போதுமென்ற மனதை உடையவர்களுக்கே சாத்திய -மாகுமே அல்லாமல் முறுமுறுக்கிற -வர்களுக்கும், திருப்தி இல்லாமல் வாழ்கிறவர்களுக்கும் அல்ல. மனநிறைவோடு வாழ்கிறவர்கள் தங்களைக் காட்டிலும் மேலான வாழ்க்கையை வாழ்பவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள். மாறாக, தங்களைக் காட்டிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் நிலைமையைப் பார்த்து தனக்கு கிடைத்திருக்கும் வாழ்வுக்காக திருப்தியடைந்து நன்றி செலுத்துவார்கள். தங்களுக்கு கொஞ்சம் இருந்தாலும் அதை பெரிதாகவும், சந்தோஷமாகவும் எண்ணுவர். திருப்தி இல்லாத மக்கள் சந்தோஷமாகவே வாழமுடியாது! சந்தோஷம் இல்லாத மக்கள் தேவனுக்கு நன்றி செலுத்தவே முடியாது!
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்க -ளைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5: 18
இதனால் வரும் பலன் என்ன?
- தனி ஜெபத்தில் மட்டுமல்லாது நாம் அன்றாடப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நம் இருதயம் அவ்வப்போது துடித்துக் கொண்டி -ருக்கும் போது, துதிகளின் மத்தி -யில் வாசம் செய்கிற தேவனை எவ்விடங்களிலும் உணர்ந்து, அவர் பிரசன்னத்தை எந்நேரத் -திலும் சூழ்ந்திருக்க செய்யலாம்
- தேவ சமாதானம் நம் இருதயத் -தை ஆண்டு கொள்ளும்
- நன்றியுள்ள சுபாவத்தை வளர்த் -துக்கொள்ள முடியும். அப்படி பழகும்போது மனிதர்கள் செய்யும் சிறு காரியத்துக்கும் நாம் நன்றிய -றிதல் உள்ளவர்களாக காணப் -படுவோம்
- நம் உயர்வுக்கும் மகிழ்ச்சிக்கும் தேவனே காரணம் என்று அவருக் -கே புகழ்ச்சியும் மகிமையும் நாம் அவ்வப்போது செலுத்துவதால் பெருமை நம்மை விழத் தள்ளாமல் தாழ்மையோடு வாழலாம்
- தாவீதைப் போன்று தாழ்வான சூழ்நிலையிலும் தேவனை துதிக்கும் போது, இக்கட்டான நிலைமை நம்மைப் நெருக்கி தள்ளி விடாமல் பாதுகாக்கும்.