கடந்த பதிவின் தொடர்ச்சி..
வேதாகமத்தில், தேவ பிள்ளைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் உபவாசம் செய்ததாக பல உதாரணங்களை பார்க்கிறோம் . மதசார்பற்ற உலக வேலையில் ஈடுபட்ட தானியேல், எஸ்தர் ராணி, என்பவர்களும் தேவ ஊழியம் செய்த மோசே, அப்போஸ்தலர்கள் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உபவாசம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
இவர்கள் எந்தெந்த சூழ்நிலையில் உபவாசம் செய்தார்கள் என்பதை ஒரு வேத அறிஞர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.
உபவாசம்,
- தண்டனையின் போது -2 சாமு 12: 16-23
- நியாயத்தீர்ப்பின் போது-1 ராஜா 21:27
- தேவையில்-எஸ்ரா 8:21
- ஆபத்தில்-எஸ்தர் 4:16
- சிக்கலில் – அப்போஸ் 27: 9
- கவலையில் – தானியேல் 6:18
- ஆவிக்குரிய போராட்டத்தில்-மத்தேயு 4:2-11
- மனம் திரும்புதலிலும், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காகவும்- அப்போஸ் 9:9-19
உபவாசத்தின் நன்மைகள்:
- நம் ஆத்துமாவை எப்போதும் சீராக வைத்துக் கொள்கிறோம்
- நம் சாப்பாட்டின் மேல் இருக்கும் வெறியை, இச்சையை சிலுவையில் அறைய செய்கிறோம்
- நம் வயிற்றை ஆள கற்றுக் கொள்கிறோம்
- சோதனையை ஜெயிக்கிறோம்
- சாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறோம்
- ஜெபத்தை தீவிரப்படுத்துகிறது: தேவன் மீதும் ஜெபத்தின் மீதான கவனத்தை கூர்மை செய்கிறோம்
- நம்பிக்கையின்மையை அகற்றி விசுவாசத்தை பெருக்குகிறோம்
- மாம்சத்தின் செய்கைகளை நாம் அடக்குகிறோம்
- சுய கட்டுப்பாட்டின் மூலம் ஆவியின் கனியை வெளிப்படுத்தப்படுகின்றது- பெருந்தீனி என்னும் பாவத்தை வெல்ல முடியும்
- செரிமான அமைப்புக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இக்குறிப்பு நம் உபவாச நோக்கமாக இருக்கக்கூடாது
உபவாசம் ஒரு சடங்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்களால் பின்பற்றக்கூடிய கட்டாய செயலாகவோ கருதப்படக் கூடாது. ஜெபத்தில் நேரத்தை செலவிடாமல் உபவாசம் செய்தால் அது பட்டினி கிடப்பதாகவே கருதப்படுகிறது. நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால் ஜெபத்தோடு கூடிய உபவாசம பழக்கம் நம்மை பெருமையிலும், அவநம்பிக்கையிலும், மனச்சோர்விலும் நம்மை விழாமல் காத்துக் கொள்ளும்.