வானத்தின் மகத்துவத்தை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நட்சத்திரங்களை கணக்கிட சாத்தியமேல்லை என்ற உண்மையை நம் சிறிய மூளை அறிந்திருந்தாலும் ஒரு முறையாவது அவைகளை எண்ண முயற்சித்திருப்போம்.. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதன் பெயரால் இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளரும் படைப்பாளரான தேவாதி தேவனால் அழைக்கப்படுகின்றன என்ற தவறிழைக்காத உண்மையை சங்கீதம் 147: 4 தெரிவிக்கிறது.
கணக்கில்லா நட்சத்திரங்களின் ஒவ்வொரு பெயரையும் நினைவில் வைத்துக் அழைக்க முடியுமேயானால், அவருடைய சொந்த சாயலில் அற்புதமாக படைக்கப்பட்ட உங்களையும் என்னையும் மறப்பாரா?
விஞ்ஞானிகள் , சூரியன் விண்ணில் சரியாக இடத்தில் அமைந்திருப்பதை வியப்பாக கருதுகின்றனர்.அது சற்று அருகில் வைக்கப்பட்டிருந்தால் வெப்பத்தால் நாம் எரிந்தும், சிறிது தூரத்தில் இருந்தால் மரணத்திற்கு நம்மை உறைய வைக்குமாம்.
மேலும்,விண்வெளியில் நமது சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இபிரமாண்ட நட்சத்திரங்களை ஒப்பிடும்போது சூரியன் ஒரு சிறு புள்ளியாகத் தெரிகிரதல்லவா? இந்த புள்ளி போன்ற சூரியனுடன் ஒப்பிடும்போது பூமி எவ்வளவு சிறியதாக இருக்கும்? பூமியுடன் நம்மை ஒப்பிடும் போது அந்த அளவை எவ்வாறு குறிப்பிடலாம்? இச்சிறு உருவம் கொண்ட நம்மை நினைக்கிறதற்கும், விசாரிக்கிரதர்கும்,நமக்காக ஜீவனையே கொடுக்கிறதற்கும் நாம் எம்மாத்திரம்! அவருடைய படைப்புகள் போலவே அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பும் முற்றிலும் அளவிட முடியாதது!
எந்த நேரத்திலாவது, எதிர்கால பயம் உங்களைப் பிடித்து, தேவையற்ற குழப்பத்திற்கு இட்டுச் செல்லும் போது, முழு அகிலத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆண்டவர் உங்கள் எதிர்காலத்தையும் வைத்திருக்கிறார் என்பதை உங்கள் மனமும் இதயமும் நினைவில் கொள்ளட்டும். அவருடைய வார்த்தையின் வல்லமை, தொங்கும் நட்சத்திரங்களையும், பூமியையும் மற்ற அனைத்து சராசரங்களையும் விழாமல் காக்கிறது. அவருடைய கட்டளைப்படி, கடல்நீர் எல்லையைத் தாண்டாது (நீதிமொழிகள் 8:29). அவருடைய அறிவின் மகத்துவங்களை யாரால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்?
உயர பறக்கும் விமானத்திலிருந்து பார்க்கும் போது கீழே பூமியின் காட்சி தேவனின் அற்புதமான வல்லமையான கைவேலைகளில் ஒரு சான்றாக அமைகிறது. நம் பட்டணத்தை குட்டியாக பார்க்கும் போது,நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா? ஆனால் பயணிக்கு பைலட்டின் வேலை அனுபவங்களை நாம் ஒருபோதும் கேள்வி கேட்பதுமில்லை, அவருடைய திறனையும் அறிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் யார் ஓட்டுகிறார்கள் என்றும் நமக்கு தெரியாது. அத்தகைய நம்பிக்கையற்ற மனிதனை நம்பி ஆபத்தான முறையில் பயணிக்க தயங்குவதில்லை என்றால் , சர்வ வல்லமையுள்ள, ஒருபோதும் தோல்வியடையாத, ஒருபோதும் நம்மை கைவிடாத , மற்றும் அவரை அண்டிநோர்களை நரகத்திற்குத் தள்ளாதவரை முழுமையாக நம்பி இந்த ஆண்டை நாம் ஏன் தொடங்கக்கூடாது.
ஆம்! அவர் உங்களைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் அறிந்திருக்கிறார், மேலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உங்கள் துணையாக இருக்க விரும்புகிறார்.எல்லா சூழ்நிலையிலும் அவரை நம்பும் போது அவர் இருதயம் மகிழும்.மட்டுமல்லாமல், நம் இருதயத்தையும் சாந்திப்படுத்தும். பயத்தைத் தடுக்கும்.
மிகக் கடினமான காலக்கட்டத்திற்குள் கடக்கும் போது, தேவன் இவ்வுலகை ஆளும் விதத்தை தியானம் செய்யும் போது ,அவர் மேல் மிகுந்த நம்பிக்கை உண்டாகும்.ஒவ்வொரு எதிர்மறையான சிந்தனைகளை கடக்க பலப்படுத்தும். நம்புங்கள் -அண்ட சராசரங்களையும் ஆண்டுகொண்டிருப்பவர் உங்கள் பெயரை அறிவார், உங்கள் சரணடைந்த வாழ்க்கையை அவரே நடத்துவார். நன்நம்பிக்கையான ஆரம்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Praise the Lord for his glory
Very inspiring and thoughtful message. Thanks for sharing
Nisha Kamaldoss
LikeLike