உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள். பல மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதத்திற்கு முன்பே அலங்கார விளக்குகளால் நகரங்கள் பிரகாசிக்கின்றன. தேவாலயங்களில் சிறப்பு நிகழ்வுகள்,கேரல்கள், மற்றும் ஏழை எளியோர்கு தான தர்மங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு கிறிஸ்துவ வீடும் மிகச் சிறப்பாக ஜோடிக்கப்பட்டு மின்னுகின்றன.
அதே நேரத்தில், 2019 ஆம் ஆண்டு மூடிவுற்று , 2020 புதிய ஆண்டினுள் நுழைய நம் இதயம் மெதுவாக தயாராகி வருகின்றன. இந்த எல்லா உற்சாகங்களுடனும் இந்த பண்டிகை காலத்தை ஏன் இன்னும் சிறப்பாக மாற்றக்கூடாது?
“டிசம்பர்: நன்றி மாதம்”
எதற்காக?
- தேவாதி தேவன் உங்களையும் என்னையும் இரட்சிக்க பரலோக மகிமையை விட்டு மனிதனாய் பிறந்ததற்காக
- உலகத்தில் மட்டுமல்லாது நம் இதயத்திலும் பிறந்ததற்காக -இதுவே கிறிஸ்துமஸின் முக்கிய நோக்கம். (இயேசு உங்கள் இதயத்தில் பிறந்திருக்கிறாரா?)
- நம் எண்ணங்களை விரிவுபடுத்தி,இவ்ஆண்டு தொடங்கி இன்று வரை நம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து , தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
குணமடைந்த 10 தொழுநோயாளிகளில், ஒருவன் மட்டுமே இயேசுவுக்கு நன்றி சொல்ல திரும்பினான். இயேசு அந்த மனிதனிடம் ‘நான் 10 பேரையும் குணமாக்கவில்லையா? மற்றவர்கள் எங்கே? என்று ஆவலுடன் கேட்டார். ஆகவே, நன்மையை மறக்காமல் நன்றியுள்ள இதயத்தோடு தன் வழியே திரும்பி வந்த அந்த ஒருவனாக நாம் இருப்போம். மேலும், பிள்ளையான இயேசுவுக்கு பரிசுகளை வழங்கி அவரை தொழுது கொண்ட ஞானிகளைப் போல் நம் இரட்சகராகிய மேசியாவுக்கு நன்றி பலிகளை பரிசாக செலுத்தி அவரை கனப்படுத்துவோம்.
“தேவா,உம் நன்மைகளை சொல்ல 1000 ஆண்டுகள் போதாது” என ஒரு அழகிய பாடல் வரிகள் கூறுகிறது .ஆனால், நடைமுறையில், அவருக்கு நன்றி சொல்ல அவருடைய ஆசீர்வாதங்களை பட்டியலிட முயற்சிக்கும்போது, சில மணிநேரங்கள் கூட தொடராக செலுத்துவதற்கு வார்த்தைகள் இல்லாமல் போய்விடுகின்றன. தேவனின் நன்மையானது- நம் கண்களுக்கு மறைவான ஆபத்துகள்,வீரியம் மிக்க நோய்கள்,பிசாசின் வலைகள் மற்றும் கண்ணிகள்,இழப்புகள் போன்றவற்றிலிருந்து காக்கப்படுவதும் உள்ளடங்கும் என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம்.
விவரமாக பார்ப்போம்!
ஒவ்வொரு நொடியும் சுற்றுச்சூழலில் உள்ள எண்ணற்ற தொற்று கிருமிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு அநேகம் உண்டு. அதே நொடியில், அபாயகரமான மரணங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு ஏனெனில் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.பாதசாரி பாதைகளில் பத்திரமாக நடப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.மேலும்,1 பேதுரு 5: 8 கூறுகிறது: “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” ஆகவே,ஒவ்வொரு நொடியிலும் பல விஷயங்கள் உள்ளடக்கியதால் , அவருடைய அற்புத செயல்களைப் புகழ்ந்து பேச இந்த வாழ்க்கை போதுமானதே அல்ல. தேவ கரம் நம் மீது இல்லையென்றால் கொடுமையான இந்த பொல்லாத உலகில் நாம் பிழைத்திருக்கவே முடியாது.
அவர் உங்களை தந்தையைப் போல சுமக்கவில்லை என்றால், நீங்கள் இதுவரை வந்திருக்க முடியுமா? நீங்கள் தனிப்பட்ட சூழ்நிலையில் அவர் பிரசன்னத்தை உணராதபோதும் அவர் உங்கள் அருகிலேயே இருந்தார். சாதனைகளில், அவரும் உங்களுடன் மகிழ்ந்தார். உங்கள் துன்பங்களால் (மனரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக, சமூக ரீதியாக) நீங்கள் தாழ்த்தப்பட்டபோது உங்களை பெலப்படுத்த அவர் தனது எல்லா வழிகளையும் வழங்கினார்.இவையெல்லாவற்றிற்கும் அவருக்கு நன்றி செலுத்தலாமா!
ஒருவேளை,இந்த ஆண்டு தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தும் அல்லது மிகவும் கடினமான சூழ்நிலை மத்தியில் கடந்து செல்பவர்களுக்கும் தேவனை மகிமைப்படுத்த கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படி நொருக்கப்பட்ட இதயத்திலிருந்து எழும் ஸ்தோத்திரங்கள் மிகவும் விலையேற பெற்றதாக இருக்கும். அது நிச்சயமாக தேவனின் இதயத்தை அசைக்கும்.
நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் , துக்கங்களை எல்லாம் சந்தோஷமாக மாற்ற வல்லவர்கு நன்றி செலுத்த உற்சாகப்படுவோம்!