‘சந்திரயான் 2‘ இன் பணியை அமைத்து ‘இஸ்ரோ‘ செப்டம்பர் 7 ஆம் தேதி தாங்கள் விரும்பிய இலக்கை அடைய தீவிரித்தது. உலகம் முழுவதும் மிகவும் வியக்கத்தக்க பதட்டமான நிகழ்வைக் கண்டபோது, ’விக்ரம் லேண்டர்’ நம்மை ஏமாற்றம் அடைய செய்தது.அடடே! இஸ்ரோவின் முயற்சிகள், சோதனைகள் மற்றும் செலவழித்த பணம் ஒரு சில நிமிடங்களில் முற்றிலும் வீணானதே!
ஒருவேளை இப்பணி வெற்றிகரமாக இருந்திருக்கும் என்றால், இந்தியா அன்றைய தினம் வரலாறு படைத்திருக்கும்.
இருப்பினும், ஏமாற்றத்தில் சளைக்காமல் இஸ்ரோ தற்போது தனது அடுத்த பணி “ககன்யான்” ஐ 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களின் விடா முயற்சிக்கு சிறந்த வாழ்த்துக்கள் !
இதேபோல், உலகெங்கிலும் ஞானிகள் தங்கள் பேருக்காகவும் நாட்டின் பெருமைக்காகவும் புதுப் புதுச் சாதனைகளைப் படைக்கின்றனர்.நம் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றிய ஒவ்வொரு துறையின் பின்னணியில் உள்ள தொழில் நுட்ப விஞ்ஞான மூளைகளை மறுக்காமல் மெச்சி கொள்கிறோம்.
சுதந்திர போராளிகளைப் பற்றி என்ன? நாட்டிற்கான அவர்களின் மகத்தான தியாகத்திற்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் – உலகத்தைப் பொறுத்தவரை, இவ்வகை சாதனையாளர்களின் வாழ்க்கை நோக்கம் அர்த்தமுள்ளதாகவும், பயன்படுத்தப்பட்டதாகவும், புராணமாகவும் இருக்கிறது.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவன் என்ன நினைக்கிறார்?
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
–மத்தேயு 16:26
இப்பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் நியமித்த, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இறுதி நோக்கத்தைக் கண்டுபிடிப்போம்.இறுதி நோக்கம் என்றால் நாம் சாகும் போது எடுக்க வேண்டிய முடிவு அல்ல.இது, நம் வாழ்வின் தலையாய நோக்கமாகும்.
ஒரு பிச்சைக்காரனாக, அருவருப்பாக வாழ்ந்து, நோய்வாய்ப்பட்ட லாசரு இந்த உலகில் எதையும் சாதிக்காமல் பரலோகம் சேர்ந்தான்.இயேசுவோடு சிலுவையில் தொங்கவிடப்பட்டு நரகத்திற்குத் தகுதியான 2 திருடர்களில் ஒருவன்,தன் வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் இயேசுவை தேவகுமாரனாக ஏற்றுக்கொண்டு மனம் மாறியதால் பரலோகம் சேர்ந்தார் . தேவ தயவால் இவர்களின் வாழ்க்கை பணி நிறைவேற்றப்பட்டது.
அந்தோ! ஐசுவரியவான் தன்னிடம் எல்லா செல்வாக்கும் இருப்பினும் நரகத்திற்கு சென்றான் (லூக்காவின் நற்செய்தி).
நாம் பரலோகம் செல்ல பிச்சைக்காரனைப் போல வாழ வேண்டும் என்பது அல்ல,ஐசுவரியவானாக இருக்க பயப்பட வேண்டியதும் அல்ல.ஏன், அந்த திருடனைப் போன்று நம் பாவங்களுக்காக மனந்திரும்ப கடைசி தருணம் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அர்த்தமல்ல. பரலோகம் தேர்ந்தெடுக்க இதுதான் நேரம் . ஏற்கனவே தெரிந்தெடுத்தவர்கள், 1% தான் எனக்கு இரட்சிபின் நிச்சயம் இல்லை என்பீர்களானால் உங்கள் வழியை செப்பனிட வேண்டியது அவசியம் !
நம் தலையாய மிஷன் : பரலோகம்
செயல்பாட்டின் திட்டம்:
இந்த மிஷனில் செலவழிக்க வேண்டிய பணம்: விசுவாசம் மட்டுமே-இவைகளில்:
1. இயேசு தேவகுமாரன்-ஒரே உண்மையான கடவுள்
2. நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மீட்பு
3. நம் பாவங்களைக் கழுவ அவர் இரத்தத்தின் வல்லமை
நம் உழைப்பு: எதுவுமில்லை, நம் பாவங்களை நம் வாயால் அறிக்கையிட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டு, இயேசுவை நம் வாழ்க்கையின் ஆண்டவராக்குவதே.
விக்ரம் லேண்டரைப் போலல்லாமல், இந்த மூலோபாயம்(strategy) ஒருபோதும் நம்மைத் தவறவிடாது, ஏனென்றால் அவரை (இயேசுவை) நம்புபவர்கள் ஒருபோதும் வெட்கமடைய மாட்டார்கள் அல்லது ஏமாற்றமடைய மாட்டார்கள்! பரலோகத்திலுள்ள பிதாவிடம் செல்ல ஒரே வழி இயேசுதான்.
ஏற்கனவே இந்த பணியை வென்றவர்கள், அடுத்தது என்ன? நம் தலையாய மிஷனை முடித்துவிட்டாலும் ஏன் இந்த கிரகத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறோம்?
– தொடரும்
(உங்கள் பதில்களை பதிவிட அனைத்து வாசகர்களும் வரவேற்கப்படுகிறார்கள்)