‘தேவன் பேசுகிறார்’ என்ற தொடரின் இந்த இரண்டாம் பதிவில், ‘சொப்பனங்களின் மூலம் தேவன் எவ்வாறு பேசுகிறார்’ என்று சிந்திப்போம்.
நாம் ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கும்போது (ஆழ் மனதில்) சொப்பனங்கள் தோன்றும். தேவன், தம் மக்களிடம் பேசுவதற்கு இது மிகவும் பொதுவான வழியாகும். ஆயினும், வேதாகமத்தில் உண்மையான தேவனை ௮றியாத நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனின் ராஜாவிற்கு கூட சொப்பனம் முலம் தேவன் பேசினதை நாம் ௮றிவோம்.
தரிசனங்களைப் போலவே, சொப்பனங்களின் நோக்கங்கள் ஒன்றே ( முன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது).
கூடுதல் நோக்கங்கள்:
- மனிதர்களை அவா்களுடைய பொல்லாத செய்கையிலிருந்து திருப்புவதற்கு (யோபு 33:17).
- அவா்களது பொல்லாத குணத்தை மாற்றுவதற்கு (நேபுகாத்நேச்சாரின் கனவில், ௮வனது பெருமையின் விளைவுகளை முன்னறிவித்தார், ஆனால் , அவன் தேவனின் ௭ச்சாிப்பிற்கு செவிசாய்க்கத் தவறியபோது சரியாக ஒரு வருடத்தில் ௮க்கனவு பலித்தது- தானியேல் 4).
- ஆன்மாவை படுகுழிக்கும், ஜீவனை பட்டய வெட்டுக்கும் தப்புவிக்க (யோபு 33:18).
- பாவம் செய்யாமல் தடுக்க (ஆதியாகமம் 20: 6).
- தேவ ஈவை வழங்க (சாலொமோனுக்கு ஞானம்- 1 இராஜாக்கள் 3: 5-14).
- தம் மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க (மத்தேயு 2:13).
- உண்மையை மற்றும் தேவனின் திட்டத்தை வெளிப்படுத்த (மாியாள் பரிசுத்த ஆவியானவரால் தான் கர்ப்பம் தரிக்கப்பட்டாள் ௭ன்று-மத்தேயு 1: 20,21).
- சரியான தேர்வைக் ௭டுக்க (மரியாள் தன் மனைவியாக எடுத்துக் கொள்ளும்படி தேவதூதன் யோசேப்புக்கு சொன்னார் -மத்தேயு 1:20).
- நாம் ௭ப்போது,௭வ்வாறு உயர்த்தப்படுவோம் ௭ன்பதை வெளிப்படுத்த (ஆதியாகமம் 40:13).
- மரண நேரத்தையும்,௭ப்படி மாிப்பார் ௭ன்பதையும் வெளிப்படுத்த (ஆதியாகமம் 40:18).
மற்றும்,
- நமது ஆன்மீக நிலையை வெளிப்படுத்துவாா்,
- பிரார்த்தனை குறிப்புகளைக் கொடுப்பாா்,
- இயற்கை பேரழிவுகளை முன்னதாக காட்டுவாா்.
- நம் நாட்டின் எதிர்கால நிகழ்வுகளை வெளிப்படுத்துவாா்.
- உலகின் விவகாரங்களைக் கூட பகிருவாா்.
- சில நேரங்களில் தேவன் நம்முடைய ஜெபத்திற்கு சொப்பனத்தில் மறுஉத்தரவு கொடுப்பார் (1 சாமுவேல் 28: 6)
கனவு என்பது கடவுளின் வார்த்தை:
யாக்கோபின் மகன் யோசேப்பு தனது வாழ்க்கையின் நோக்கத்தை சொப்பனம் மூலமாகவே மட்டும் பெற்றுக் கொண்டார். அவர் மோசேயைப் போன்று தேவனிடமிருந்து நேரடியாகவோ அல்லது பவுலைப் போன்று ஊழியர்களிடமிருந்து தீர்க்கதரிசன வார்த்தையின் மூலமாகவோ தன் ௮ழைப்பை ௮ரிந்துகொள்ளவில்லை.
சங்கீதம் 105: 19 “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது”.-இதில் வார்த்தை ௭ன்பது சொப்பனம்.
எந்தவொரு சொப்பனத்தின் நிறைவேறுதல் கால எல்லைக்குட்பட்டதல்ல – நாள், மாதம் அல்லது ஆண்டு (கள்) கூட ஆகலாம். நேபுகாத்நேச்சார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு இன்னும் நிறைவேறி வருகிறது.
வியாக்கியானம்:
தானியேல் 1:17 இல் ‘தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்’.
தேவன் கொடுத்த இந்த ௮றிவை வைத்துதான் சிறையாக கொண்டுபோகப்பட்ட தானியேல் பாபிலோனில் அனைத்து ஞானிகளிளுக்கும் தலைவராக மாறினார்;கைதியாக இருந்த யோசேப்பு ௭கிப்திற்கு பிரதமராக ஆனார்.
௭ப்படி வியாக்கியானம் செய்வது:
தாிசனத்தைப் போலவே, ஒவ்வொரு சொப்பனமும் தேவனின் வார்த்தையின் வெளிச்சத்திலும் பரிசுத்த ஆவியின் உதவியாலும் விளக்கப்பட வேண்டும்.
௮ன்றியும், ஒரே மாதிரியான பொருளுக்கு(character) ஒரே ௮ா்த்தத்தை எடுக்க கூடாது. உதாரணமாக, யூதாவின் சிங்கம் இயேசுவை குறிக்கிறது என்பதை நாம் அறிவோம். சாத்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல வருகிறான் என்றும் வேதம் கூறுகிறது. எனவே, சில நேரங்களில், சாத்தான் இயேசுவின் வடிவிலும் அல்லது அறியப்பட்ட நபரின் வடிவத்திலும் வந்து நாம் தவறாக வழிநடத்தபட மாறுவேடம் போடுவான் ௭ன்பதையும் நாம் நன்கு ௮றிய வேண்டும்.
தாிசனம் போலவே, சொப்பனங்களில் கண்ட நபர்,சழல் மற்றும் அமைப்பை அடிப்படையில் கொண்டே வியாக்கியானம் செய்வது சாலச் சிறந்தது.
–தொடரும்..