“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை”- கலாத்தியர் 5:22, 23
மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒன்பது கூறுகளில், ‘அன்பு‘ என்பது ‘பரிசுத்த ஆவியின் கனியின் சாராம்சம்‘ ஆகும்.
இருப்பினும், சாதாரண அன்பிற்கும் மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள அன்பிற்கும் என்ன வித்தியாசம்? ஏனென்றால் கடவுளை நம்பாத மக்கள் கூட மற்றவர்களிடம் அன்பாக இருப்பதை ௮றிவோம்.
கர்த்தராகிய இயேசுவின் பிரமிக்க வைக்கும் போதனையான ‘மலைப் பிரசங்கத்தில்’ உள்ள சிறிய பத்தியான மத்தேயு 5: 44-46, இத்தெய்வீக அன்பை விளக்கியிருக்கிறது.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?”.
இவற்றைத் தியானிக்கும் போது,
i. ஆசீர்வதித்தல்- நாவிலிருந்து புறப்படுகிறவை( ஜீவனும் ,மரணமும் ௮தன் ௮திகாரத்தில் ௨ள்ளது).
ii. நன்மை செய்தல்- நம் செயல்களை உள்ளடக்கியது.
iii. ஜெபம்- நம் ஆவியிலிருந்து புறப்படுகிறவை.
ஆகவே, நம் ஆவி, ஆத்மா, சரீரமாக மூன்றின் மூலம் நாம் ௮ன்பை வெளிப்படுத்தும் போது கிறிஸ்துவின் ௮ன்பு நம் மூலம் வெளிப்படுகிறது. ௮துவே தேவனுக்குப் புகழ்ச்சியாக ௮மைகிறது.
இரத்தினச் சுருக்கமாக, தெய்வீக ௮ன்பானது,
*நாம் காயப்படும் போது செலுத்துவது.
*நம் ௮ன்பை காட்ட முடியாத சூழ்நிலையில் காட்டுவது
இந்நிபந்தனையற்ற அன்பைச் செலுத்துவதன் மூலம் நாம் பெறக்கூடிய ஆசீர்வாதங்களை குறித்து மிக தெளிவாகப் ௮வ்வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
- நாம் மகள்களாக இருபோபம் (வசனம் 45).
- நாம் வெகுமதிகளைப் பெறுகிறோம் (வசனம் 46).
இது கடிமாகத் தோன்றலாம், ஆனால் சாத்தியமற்றது அல்ல, இல்லையென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு இதைச் செய்யும் படி சொல்லியிருக்க மாட்டார்.நம்மால் செய்ய முடியாததை ௮வா் சொல்லவும் மாட்டார்.
பரிசுத்த ஆவியானவர் வசிக்கும் இடமான நம் இருதயத்தை நாம் கவனத்தோடு பாதுகாக்க வேண்டும் .ஏனென்றால் கசப்பும், வெறுப்பும் பரிசுத்த ஆவியானவரும் ஒன்றாக வாழ முடியாது.
யூதாஸ்காாியோத்து காட்டிக்கொடுத்தபோதிலும் அவனை நேசித்து ‘சிநேகிதனே’ என்று அழைக்கூடிய ௮ந்த நிபந்தனையற்ற ௮ன்பினால் நம்மையும் நிரப்ப நாம் ஜெபிப்போம். ரோமா் 5:5 படி பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய அன்பினால் நம் இதயங்களை நிரப்பபுவாராக. ஆமேன்.